Tuesday 31 July 2018

The bicycle thieves

        என் மனதை மிகவும் பாதித்த படம். நண்பரின் பரிந்துரையோடு பார்த்தேன்.

       வாழ்க்கை தான் எவ்வளவு விசித்திரமானது. ஒரு சாதாரண விளிம்பு நிலை மனிதனையும் சூழ்நிலை குற்றம் செய்ய தள்ளிவிடுகிறது. குடும்பம், குழந்தைகள் என்று வரும்போது மனிதன் தன் நிலையை மறந்து உழைக்கிறான். ஆனால் அதில் ஒரு அடி விழும் போது என்ன செய்வது? படத்தில் தனது சைக்கிள் தொலைந்த பின் ஒரு தந்தைக்கு வரும் மனகலக்கம்  படம் பார்க்கும் நமக்கும் தொற்றிகொள்கிறது. படம் நெடுக simplicity தான் ஆளுமை.  If something is not able to explain in simple terms, then it's waste...இது இந்த படத்தில் மிக அருமையாக பொருந்தும்.  தன் மகன் முன் எந்த அப்பனுக்கும் அவமான பட விருப்பம் இருக்காது...பட முடிவில் அப்பாவின் தொப்பியை தட்டி மண்ணை போக்கிவிட்டு கொடுக்கும் மகன் அவரின் இழந்த மரியாதையை மீட்டு கொடுப்பது போலவே சித்தரிக்கப்படுகிறது.

ஒரு சில மாதங்கள் இந்த படத்தில் இருந்து வெளிவர முடியவில்லை.  இதற்க்கும் நடித்தவர்கள் எல்லாம் not professional actors.

Monday 30 July 2018

முதல் எழுத்து

ஏதாவது எழுதலாமா என்று நினைக்கும் போதெல்லாம் என்ன எழுத என்று உடனே நினைப்பு வந்து அதை கெடுத்துவிடுகிறது. எதையுமே செய்யும் போது ஒரு தீர்க்கம் தேவைப்படுகிறது. அது வாழ்க்கைக்கும் பொருந்தும். காரியத்தை நீர்த்துபோக செய்யும் பல வழிகளை மனம் நாடும்...உங்கள் தீர்க்கமே அதனை வெல்கிறது.

முதல் ப்லாக் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்ள யோசிக்கிறேன்.